வியாழன், 12 ஜனவரி, 2012

நண்பன் - விஜயை சரிவிலிருந்து மீட்டுவிட்டது. -- ரசிகன் விமர்சனம்





 ஜனவரி 12 ரிலீஸ் என்பதால் என்னமோ எண்கள் உற்சாகம் கொஞ்சம் கம்மியாக தான் இருந்தது. மொத்தம் ஐந்து அரங்கில் வெளியிடுவதாக போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். ஆனால் இன்று காலை எட்டு மணி சிறப்பு காட்சி இரண்டு திரை அரங்கில் மட்டுமே ஒளிபரப்பினார்கள்.  எல்லாம் உள்ளூர் அரசியல் தான் காரணம் என கேள்விபட்டேன்.
ரொம்ப நாளைக்கு பிறகு சன்  டிவியில் விஜய் பட விளம்பரம் போட்டது, முதன் முறையாக ஷங்கர் டைரக்ஷனில் விஜய், என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் இந்த படத்திற்கு இருந்ததால், வழக்கம்போலவே முதல் நாள் முதல் சாவிற்கு டிக்கெட் எடுத்து படத்திற்கு போனேன்.


படம் 7 .45  இற்கு போட்டார்கள். அப்போது வாட்சை பார்த்தவன் அதன் பிறகு படம் முடிந்த பிறகுதான் வாட்சை பார்த்தேன் டைம் போனதே தெரியவில்லை. ரொம்ப மாதங்களுக்கு பிறகு இப்படை ஒரு விஜய் படம் பார்க்கிரேன். (கடைசியாக நான் மெய்மறந்து பார்த்தது கில்லி ) .


படம் அந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும், எந்த குழப்பமும் இன்றி தெளிவாகவும், நகைச்சுவை நக்கலுடனும் , கலகலப்பாகவும் இருந்தது. முக்கியமாக காலேஜ் முதல் விடுதியில் அந்த சீனியர் மாணவர்களிடம் இருந்து விஜய் தப்பிக்கும் அந்த சீன செம சூப்பர். அங்கு ஆரம்பித்து விஜய் வரும் ஒவ்வொரு சீனிலும் விஜய் பின்னி பெடலெடுக்கிறார். எந்த இடத்திலும் விஜய் மீது கடுப் போ வரவில்லை.


இது விஜய்க்கு இந்த படத்தில் உள்ள பிளஸ் களில் ஓன்று. ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், சத்யராஜ் என ஒட்டு மொத்த பட்டாளமே அவங்களுடைய ரோலை சரியாக செய்திர்ருக்கிரார்கள்.  சத்யன், சத்யராஜ் இருவருக்கும் இது ஒரு மயில் கல் ஆகும். ஜீவா ஸ்ரீகாந்த் இருவரையும் நான் என நண்பர்களாகத்தான் எனக்கு தெரிந்தார்கள். (அப்போ நீயென்ன விஜயானு கேட்கக்கூடாது). எந்திரனில் வரும் பிரசவ கட்சி போல இதிலும் ஒரு சீன்வருகிறது .ஆனால் அதற்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.அந்த சீன் எனை மெய்சிலிர்க்க வைத்தது. 


ஜெயராஜின் இசை , ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆக்டர்ஸ் நடிப்பு என ஒட்டு மொத்த கலவையும் சரி சமமாக கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ஒரு பாடலுக்கு அவர் டீமுடன் வது செல்கிறார். ஆக மொத்தத்தில் கொடுத்த நூறு ரூபாயுக்கு வஞ்சனை இல்லாமல் படத்தை கொடுத்த இயக்குனர் ஷன்க்கர், இளைய தளபதி, ஜீவா, ஸ்ரீகாந்த் சத்யராஜ், சத்யன் மற்றும் டீம் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.



நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயை இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க விட்டதற்கு அவர் அப்பா எஸ்.எ. சந்திரசேகருக்கு மாபெரும் நன்றிகள்.
இவ்வளவு பெரிய நல்ல அம்சமான படத்தை கொடுத்த ஷங்கர் ஒரே ஒரு குறை மட்டும் வைத்துவிட்டார் அது நாயகி இலியானா.
எங்கிருந்து பிடித்தார்கள் இவரை.


படு மொக்க பீசுங்க. ஒடம்புல ஒண்ணுத்தையும் காணூம். முகத்தை குளோசப்புல பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. இத மட்டும் சரி செய்திருந்தால் படம் 100 % திருப்தியா இருந்திருக்கும். 


இந்த படம் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் கொடுத்த ஷங்கர் அண்ட் டீமிற்கு எனது  பொங்கல் வாழ்த்துக்கள்.  








1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்..சினிமா விமர்சனம் மட்டுமின்றி..அவ்வபோது..மற்ற பதிவுகளும் பதியவும்..வலையுலகம் உங்களை வரவேற்கிறது..!

    பதிலளிநீக்கு